Nazareth Illam, Home for the Mentally Ill, is a unit of the Congregation of the Servants of Charity.
It is situated in the remote mountainous area of Thalavadi, Erode District, in Tamil Nadu, in the southern part of India. The mission for the Mentally Ill began on 21st May, 2009. This is a Home that cares for the mental health of the people who are neglected and abandoned by their families. Our focus is to rescue them with the help of the family members or local police, identify their illness with the help of the Psychologists and Psychiatrists of the Erode Government General Hospital. We accompany them with love and assure them of the hope of recovering from their mental illness. We provide them with boarding and lodging to improve their quality of life, ensure their dignity, a peaceful environment, free food, medicines, treatment, counseling, psychotherapy, and reunite them with their families. We also look for job opportunities once they are recovered.
தாளவாடி இல்லம் மனநல காப்பகம்
குடும்பம் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அன்பின் பணியாளர் சபை முதல் இல்லம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் நாசரேத் இல்ல மனநல காப்பகம் மே 21, 2009 அன்று தொடங்கியது. முதலில், சமூக அடிப்படையிலான மறுவாழ்வு (CBR) பயிற்சித்திட்டமாக தொடங்கப்பட்டு, பின்பு அடுத்த ஆண்டுகளில், மனநல காப்பாகமாக செயல்பட்டுவருகின்றது. இந்த இல்லாமனது மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை & மாநில மனநல ஆணையத்தின் அங்கீகாரத்துடன், இந்ததுறை சார்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் திறம்பட செயல்பட்டு வருகின்றது.
குடும்ப உறுப்பினர்களால் கவனிக்க முடியாத, குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டு பொது இடங்களில் கேட்பாரற்று இருக்கும் மனநல பயனாளிகள் இங்கு தஙகள் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு ஆண்கள் & பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் தனித்தனி கட்டடங்களில் அவர்களது உறைவிடமும், அவர்களை பராமரித்து கொள்ள 20 பணியாளர்களும் உள்ளனர். இங்கு, அவர்கள் அன்போடும், உரிய மனித மாண்போடும் கவனித்துக்கொள்ளபடுகிறார்கள். அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், அமைதியான இயற்கை சூழல், மனநல ஆரோக்கியோகியத்திற்கான மருந்து மாத்திரைகள், மனநல ஆலோசனை, யோகா, தியானம், நடைபயிற்சி, உடற்பயிற்சி, தங்களது அன்றாட சுயதேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்ள பயிற்சி, மனநலத்தை மீட்கொணர்வதற்கான மறுவாழ்வு தொழிற்பயிற்சிகள் (கூடை பின்னுதல், தையல் பயிற்சி, கால்மிதி விரிப்பு தயாரிக்க பயிற்சி, பாக்குமட்டை தட்டு தயாரிக்க பயிற்சி, விவசாயம் செய்ய பயிற்சி, மாடு & கோழி வளர்க்க பயிற்சி, மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி), இசை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆகியவை கொடுக்கப்படுகின்றது. இதுவரை, 1048 நபர்கள் இந்த இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு, 1012 நபர்கள் மறுவாழ்வு பெற்று தங்களது இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
உடல் நலம் போன்று மனநலமும் கடவுளின் கொடையே
"மனம் அமைதியாக இருந்தால் வாழ்க்கை எளிதாகும்."
எங்களோடு இணைந்து எங்களின் மனநலம் காப்பு பணியில் நீங்களும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய பகுதி முகவரி,,,
GUANELLA NAGAR, Post Box No. 4, Soosaipuram Pirivu,
Doddagajanur (Po),
Thalavadi (Tk), Erode-Dt. 638 461.
Ph: 04295 – 245281, Mobile: 8098148293, 8825518962, 8050560672
• Website: https://nazarethillam.blogspot.com/
No comments:
Post a Comment